பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் வரலாற்று புத்தகத்தில் பதிவுகளாக மட்டுமே இருக்கும்..! வேதனை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்…
குளம், குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவிடக்கோரிய வழக்கு இன்று முடித்து வைக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் கூறியதாவது :
நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது
பக்கிங்காம் கால்வாய் குறித்து பேசிய நீதிபதிகள் பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் வரலாற்று புத்தகத்தில் மட்டுமே கால்வாய் பற்றிய பதிவுகள் இருக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்
