பாஜக அடுத்த கட்டத்துக்கு நகரத் தயாராக உள்ளது – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
பாஜக அடுத்த கட்டத்துக்கு நகரத் தயாராக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளர்
செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 150-வது பிறந்த நாளான இன்று நெல்லையில் அவரது மணி மண்டபத்தில் மாநில தலைவர் திரு.அண்ணாமலை வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : தற்போது தமிழகத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அடுத்த 5 வருடங்களில் 150 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பர்”
கடவுள் இல்லை என்று சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆண்டாள் கோவில் கோபுர முத்திரையை பயன்படுத்துகிறார் கடவுள் இருக்கிறார் என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும்
மேலும் பேசிய அவர் இதுவே திமுகவின் கடைசி ஆட்சி காலம் இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை என அண்ணாமலை தெரிவித்தார்
