மனித உயிர்கள் முக்கியமானது என கருதியே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் சேகர் பாபு
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகதான் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
மனித உயிர்கள் முக்கியமானது என கருதியே தமிழ்நாடு அரசு பொது வெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்படவில்லை.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகதான் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என தெரிவித்தார்
