உலகம்

ஆப்கானிஸ்தானில் எங்கள் 20 வருட ராணுவ முகாம் முடிவுக்கு வந்தது..! ராணுவ படைகள் முழுமையாக வெளியேறியது – அதிபர் ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் எங்கள் 20 வருட ராணுவ முகாம் முடிவுக்கு வந்தது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார் .

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 17 நாட்களில் எங்கள் படைகள் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய விமானப் போக்குவரத்தை இயக்கி 1,20,000 அமெரிக்க குடிமக்கள், எங்கள் நட்புநாடுகளின் குடிமக்கள் மற்றும் அமெரிக்காவின் ஆப்கானிய நட்புறவாளர்களை வெளியேற்றின.

Bring the Troops Home' Is a Dream, Not a Strategy

ஆப்கானிஸ்தானில் எங்கள் 20 வருட ராணுவ முகாம் முடிவுக்கு வந்தது . ஆப்கானிஸ்தானிலிருந்து ஆகஸ்ட் 31 அதிகாலையில் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறுகின்றன.

US military ran Taliban interference to get Afghan evacuees on South Korean  aircraft | Stars and Stripes

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் அமெரிக்கர்கள், ஆப்கானிஸ்தான் மக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு பாதுகாப்பான வழியை உறுதி செய்வதற்காக எங்கள் சர்வதேச நட்புநாடுகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைக்க தலைமை வகிக்குமாறு நான் வெளியுறவு செயலாளரிடம் கேட்டுக் கொண்டேன். இன்று நிறைவேற்றப்பட்ட UNSC தீர்மானம் இதில் அடங்கும்.

US Military Coy About Numbers of Troops Leaving Afghanistan | Voice of  America - English

நாளை பிற்பகல், ஆப்கானிஸ்தானில் எங்கள் இருப்பை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்ற எனது முடிவை மக்களுக்கு எடுத்துரைக்கிறேன். திட்டமிட்டபடி எங்கள் விமானப் பயணத்தை முடிவுக்குக் கொண்டுவர கூட்டுத் தலைவர்கள் மற்றும் எங்கள் தளபதிகள் அனைவரின் பரிந்துரை இது. என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்