Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் 50% பார்வையாளர்களுடன் 23ம் தேதி முதல் தியேட்டர்களை விதிமுறைகளுடன் திறக்க அனுமதி

தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதையடுத்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்றாவது அலை வர வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர், மருத்துவ வல்லுநர்கள் கலந்துக்கொண்டனர்.

தமிழகத்தில் நாளை மறுநாள் காலையுடன் ஊரடங்கு முடிவடைகிறது. இந்நிலையில் ஊரடங்கை மேலும், இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், புதிய தளர்வுகளையும் அறிவித்துள்ளார்.

அதன்படி, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50% பார்வையாளர்களுடன் 23ம் தேதி முதல் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.