வாய்தா மேல் வாய்தா கேட்டதால் முன்னாள் அமைச்சர் மீது கடுப்பான சென்னை உயர்நீதிமன்றம்..!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் . தொடர்ந்து வாய்தா கேட்டதால் ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது .

உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால், வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது
இந்நிலையில் உள் நோக்கத்துடனேயே பிழைகள் கொண்ட மனுவை உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தரப்பு தாக்கல் செய்துள்ளனர் என்று லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது .
உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காவிட்டால் அடுத்த விசாரணையின் போது இந்த வழக்கில் விசாரிக்கப்படும் மேலும் இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதி நிர்மல்குமார் தெரிவித்தார்
