தமிழ்நாடு

அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் – சென்னை மாநகராட்சி

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சமீப காலமாக குறித்து வந்த நிலையில் தற்போது சில மாவட்டங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளது குறிப்பாக சென்னையின் பல இடங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :

பொதுஇடங்களில் அதிகமாக கூடுவதை பொதுமக்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதிலும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதிலும் மக்கள் அலட்சியமாக உள்ளனர் இதனால் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது