Uncategorized

என் நாடு ரத்தக் களறி ஆவதை தவிர்க்கவே அதிபர் பதவியிலிருந்து விலகினேன்- ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி!

என் நாடு ரத்தக் களரி ஆவதை தவிர்க்கவே அதிபர் பதவியிலிருந்து விலகினேன் என்று ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது

நாட்டை விட்டு வெளியேறுவது அல்லது தலிபான்கள் வன்முறை என்ற இரு கடினமான தேர்வுகளை கடந்தேன்.

20 ஆண்டுகளாக நாட்டை பாதுகாக்க என் வாழ்நாளையே அர்ப்பணித்தேன்.

மக்கள்தான் முக்கியம் என்பதால் பதவியை ராஜினாமா செய்தேன்.

நாட்டின் செழிப்பு, மரியாதையை காக்க இனி தலிபான்கள்தான் பொறுப்பு.

இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் பேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளார் அஷ்ரப்.