தமிழக பட்ஜெட் தாக்கல் : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை..!
மத்திய அரசிடம் இருந்து ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை பெற நிபுணர் குழு அமைக்கப்படும்.
பெட்ரோல், டீசல் வரி உயர்வால் மத்திய அரசுக்கு 69% வருவாய் அதிகரித்துள்ளது.
மாநிலங்களுக்கு குறைந்த அளவே வரி வருவாய் பிரித்து அளிக்கப்படுகிறது.
ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும்.
பொது நிலங்கள் மேலாண்மைக்கு தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்.
அனைத்து குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை அறிய தரவுகள் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி கலைஞர் செம்மொழி தமிழ் விருது ரூ.10 லட்சம் பரிசுடன் வழங்கப்படும்.
கீழடி, சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இந்த பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
கீழடியில் திறந்தவெளி கண்காட்சி அமைக்கப்படும்; கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதியில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடியும், தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடியும் ஒதுக்கீடு.
சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கு ரூ.4,807 கோடி நிதி ஒதுக்கீடு.
தேவையுள்ள இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகளை ஏற்படுத்துவதற்காக வழிகாட்டி நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்கு குழு ஏற்படுத்தப்படும்.
விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி செல்ல அரசு உறுதியேற்றுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.500 கோடி வரை நிதி ஒதுக்கீடு.
காவல்துறையில் 14,317 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை நடக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும்.
காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்கப்படும்; இதற்காக ரூ.433 கோடி ஒதுக்கீடு.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைகம் ரூ.150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த ரூ.6,607 கோடி நிதி ஒதுக்கீடு.
மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும்.
நீதித்துறைக்கு ரூ.1,713 கோடி ஒதுக்கீடு; பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.1,360 கோடி ஒதுக்கீடு.
காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி; சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கு ரூ.4,807 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி, தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு.
நியாய விலைக்கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.
தேவையுள்ள இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகளை ஏற்படுத்துவதற்காக வழிகாட்டி நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்கு குழு ஏற்படுத்தப்படும்.
அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும்.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்.
79,395 குக்கிராமங்களுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ரூ.3 கோடி மீண்டும் அளிக்கப்படும்.
