அரசியல்தமிழ்நாடு

எஸ்.பி.வேலுமணி கொரோனாவில் மட்டும் ரூ.10,000 கோடி கொள்ளை… கார்த்திகேய சிவசேனாபதி கருத்து…

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்துவது வரவேற்கத்தக்கது என்று திமுகவைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் மட்டும் தனிக்கொள்ளையாக மொத்தம் 10 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக அவர் தெரித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனக்கு நெருக்கமானவர்களுக்கு 811 கோடி ஒப்பந்தங்கள் ஒதுக்கியதாக புகார் எழுந்தது. திமுக எம்.பி. எஸ்.ஆர்.பாரதி, அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 53 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் சோதனையில் பல்வேறு முக்கி ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்படும் லஞ்ச ஒழிப்பு சோதனை வரவேற்கத்தக்கது என கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார். இவர் தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். தொடர்ந்து பேசிய அவர், எஸ்.பி.வேலுமணி கொரோனாவை வைத்து அடித்த தனி கொள்ளை சுமார் 10 ஆயிரம் கோடி கொள்ளை அடித்திருப்பார் என்றார்.

இவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கார்த்திகேய சிவசேனாதிபதி கூறினார்.