தமிழ்நாடு

இனி அவதூறாக பேசக்கூடாது… பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன்…

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில், நடைபெற்ற மத பிரச்சார கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, பாரத மாதா, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை அவதூறாக பேசியதை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டது. பின்னர் தலைமறைவான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, மதுரையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுததப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், தன்னை ஜாமினில் விடுவிக்கக்கோரி, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் அரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய வழக்கை ரத்து செய்யவும் கோரியிருந்தார்.

அவரது மனு, நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, அவரது வயது மற்றும் இதய நோயாளியாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உள்ளதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும், அரசியல் தலைவர்களையோ மத ரீதியாகவோ மீண்டும் பேச மாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரவும் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.