திருப்பதி கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு…
தமிழக முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தார் இன்று காலை விஐபி பிரேக் தரிசனத்தில் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இறை நம்பிக்கை கொண்டவராக பார்க்கப்படுகிறார். அண்மை காலமாக, அவர் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறார்.

இந்த நிலையில் திருப்பதி கோயிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், ஏழுமலையானை வழிபட்டனர். விஐபி பிரேக் எனும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில், தீர்த்தங்கள், பிரசாதங்கள், சேஷ வஸ்திரங்கள் அவருக்கு வழங்கப்பட்டது.
