அரசியல்தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சாதகமான அம்சங்களே இடம் பெறும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

விவசாயிகள் தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய வகையில் வேளாண் பட்ஜெட் இருக்கும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், தமிழக பட்ஜெட் வரும் 13 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் 14 ஆம் தேதி வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

வேளாண் பட்ஜெட்டில் இடம் பெறவேண்டிய அம்சங்கள் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இரு தினங்களுக்கு முன்பு ஆலோசனை மேற்கொண்டார். அப்போது நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், வேளாண் துறை செயலாள்ர உள்ளிட்ட பலர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், விவசாயிகள் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய வகையில் வேளாண் பட்ஜெட் இருக்கும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. தெரிவித்துள்ளார். வேளாண் பட்ஜெட் குறித்து விவசாய சங்கம், அரசிய்ல கட்சியின் விவசாய அணிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கறும்பு அறுவடையில் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான அம்சங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.