ஆட்சி மாறினாலும் சட்டத்தை மாற்றாதீர்கள்… அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…
ஆட்சி என்பது சைக்கிள் போல மாறி மாறி வரும் என்றும், முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அடுத்து வரும் ஆட்சி பின்பற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம், அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், திருவள்ளூர் பல்கலைக்கழகம், விழுப்புரத்திற்குட்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்படிப்புகளை மேற்கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. இதை எதிர்த்து, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அதிகார வரம்பை மீறி, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், அறிவிப்பை எவ்வாறு வெளியிட்டதென்று நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், நீதிமன்றத்தில் ஆஜராகி, அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்றே ஜெயலலிதா பல்கலைக்கழகமும் அமைக்கப்பட்டுள்ளது என்றும், ஜெயலலிதா பல்கலைக் ரத்து செய்வதாக தமிழக அரசாணை வெளியிட்டதாக தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒரு ஆட்சி என்பது சைக்கிள் போன்றது என்றும், இது மாறி மாறி வரும் என்றும் கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை பின்பற்றப்பட வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் படிப்பதற்கான அறிவிப்பாணையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
