ஆ.ராசாவின் மகள் ‘மயூரி ராசா’, தமிழ் பெயரா? சமஸ்கிருத பெயரா? எஸ்.ஆர்.சேகர் கேள்வி…
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மகள் மயூரி ராசா தமிழ் பெயரா? சமஸ்கிருத பெயரா? என்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் துணை பொது செயலாளருமான ஆ.ராசா, 2ஜி வழக்கில் சட்டப் போராட்டத்தில் வழக்கில் இருந்து மீண்டவர். ஆ.ராசா, தனது மகள் மயூரியை சட்டம் பயில வைத்துள்ளார். புது டெல்லி வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறார்.

மயூரிக்கு நண்பர்கள், திமுகவைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா, மகள் மயூரியின் சான்றிதழை சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மயூரி தமிழ் பெயரா? சமஸ்கிருத பெயரா? அவருக்கு இந்தி தெரியுமா? தெரியாதா? என கேட்டுள்ளார். இப்படி தமிழ்நாட்டு மக்கள் காதில் மொழியின் பெயரால் பூ சுற்றுகிறீர்கள் என்று திமுகவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
