அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம்… மருத்துவமனை நிர்வாகம் தகவல்…
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 20 ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவைச் சேர்ந்தவர்கள், சசிகலா ஆகியோர் மருத்துவமனை சென்று மதுசூதனின் உடல்நலம் குறித்து மருத்தவர்களிடம் கேட்டறிந்தனர்.
இந்த நிலையில், மதுசூதனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதிமுக நிர்வாகிகள், மதுசூதனனைப் பார்க்க, மருத்துவமனை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
