Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று பாதிப்பு 1,908- ஆக பதிவாகி இருந்த நிலையில், இன்று 1,949- ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,67,401- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,011- ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 38- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பை கண்டறிய 1 லட்சத்து 56 ஆயிரத்து 635- மாதிரிகள் உள்ளன. சென்னையில் இன்று 189- கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சை உள்ளவர்கள் எண்ணிக்கை 20,117- ஆக உள்ளது.