எலிசபெத் ராணியை கொல்ல ஆர்வமாக கூறிய நபர் சுட்டுக்கொலை…
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தை கொலை செய்ய தான் ஆர்வமாக இருப்பதாக கூறிய நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மக்களாட்சி தொடங்கிய பின்னரும் அரச குடும்பத்தை மிகவும் மரியாதையாக நடத்துவது பிரிட்டானிய அரசுதான். பிரிட்டனில் மேல் சபை, கீழ் சபை இருந்தாலும், மகாராணியான இரண்டாம் எலிசபெத், மசோதாவில் கையெழுத்திட்டால் மட்டுமே அது சட்டமாகும். அந்த அளவிற்கு, பிரிட்டானிய அரசு, எலிசபெத் குடும்பத்தை மதிக்கிறது. இரண்டாம் எலிசபெத் ராணிக்கு 90 வயதைக் கடந்தபோதும், அவருக்கான பாதுகாப்பு வளையம் தளர்த்தப்படவில்லை. இந்த நிலையில், எலிசபெத் ராணிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை, பிரிட்டானிய போலீசார் சுட்டுக் கொன்றனர்.
சுரேஷ் அமன் (Sudesh Amman) என்கிற இஸ்லாமிய வாலிபர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெற்கு லண்டன் பகுதியில் போலி தற்கொலை ஆடை அணிந்து, அங்கிருந்த இரண்டு பேரை கத்தியால் தாக்கினார். பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால், ஏற்கனவே இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். எனவே இவரை வெளியில் விடக் கூடாது என்று உளவு துறை எச்சரித்திருந்தது.

ஆனாலும், லண்டன் நீதிமன்றம் உத்தரவின்பேரில் அமன் விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த அவர் பயங்கரவாத குழுவில் இணைய ஆர்வம் காட்டியுள்ளார். அது மட்டுமின்றி மகாராணி இரண்டாம் எலிசபெத்தை கொல்ல ஆர்வமாக இருப்பதாகவும், இதற்காகதான மனித வெடிகுண்டாக மாறத் தயார் என்றம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில், பிரிட்டானிய சிறப்பு புலனாய்வு படையினரால் அமன் சுட்டக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
