சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதியின் படம்… குடியரசு தலைவர் திறந்து வைத்தார்…
சட்டப்பேரவையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசுகளை வழங்கினார். பின்னர், சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
இதனை அடுத்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
இந்த விழாவை அதிமுக புறக்கணித்த நிலையில், பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை இவ்விழாவில் பங்கேற்றுள்ளார்.
