3000 மான்கள் துள்ளி குதித்து ஓடிய காட்சி… ரீடுவிட் செய்து மகிழ்ந்த பிரதமர்…
மூவாயிரம் மான்கள் ஒரே இடத்தில் துள்ளி கதித்து ஓடிய அழகிய காட்சியை பிரதமர் நரேந்திர மோடி, ரீடுவிட் செய்துள்ளார்.
குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டத்தில் வெலவாடர் தேசிய பூங்கா உள்ளது. அழியும் நிலையில் உள்ள மான் இனமான கலைமான்கள் இந்த பூங்காவில் அதிகளவு உள்ளது. அதுமட்டுமல்லாமல், புல்லின வகைகள் மான்களும் இங்கு உள்ளன.
வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. ப்ளமிங்கோ மற்றம் பெலிக்கன்கள் இந்த பூங்காவிற்கு வருகை தருகின்றன. தற்போது இந்த வெலவாடர் ப்ளாக்பக் தேசிய பூங்காவில் அமைந்துள்ள சாலையில் மான்கள் துள்ளி குதித்து, ஓடும் காட்சியை பூங்கா நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த காட்சியில் காட்சியில் சுமார் 3000 மான்கள் இருக்கும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அரிய காட்சியை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ரீடுவீட் செய்துள்ளார். இந்த காட்சியை பதிவிட்டு “எக்ஸலண்ட்” என்று பதிவிட்டுள்ளார்.
