TN CORONA UPDATES : தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்…!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த மாத இறுதியில் இருந்து தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலில் கூறிருப்பதாவது :
தமிழகத்தில் இன்று புதிதாக 1,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,50,282 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,937 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மேலும் 2,361 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,93,583 ஆக உயர்ந்துள்ளது.
