முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு… 55% சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு…
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது, வருமான வரி துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் வேட்புமனுவில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாக தெரிவித்த நிலையில் கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக உயர்ந்துள்ளது என்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகம் உள்பட தமிழகம் முழுவதும் 26 ஆம் தேதி கரூர் லஞ்ச ஒழிப்ப துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார். இந்த சோதனையின்போது 25 லட்சம் பணம் சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 55 சதவிகித சொத்துக்கள் சேர்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வேட்புமனுவில் 2 கோடியே 51 லட்சது 91,378 மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தார். 2021 சட்டமன்ற தேர்தல் வேட்புமனுவில் 8.62 கோடியாக உயர்ந்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஆவணங்களைக் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 2016 ஆம் ஆண்டில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வரவு-செலவு கணக்கு குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஆய்வு செய்தார்கள்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 55 சதவிகிதம் சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வங்கிக் கணக்குகள், லாக்கர்கள் சோதனை செய்ய உள்ளதாகவு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
