அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். திடீர் டெல்லி பயணம்… பிரதமர், அமித் ஷாவை சந்திக்கிறார்…
முன்னாள் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்குப் பின் முதன் முறையாக ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அவர், நாளை காலை 10 மணிக்குமேல், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இதையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கும் மேகதாது அணை கறித்து, பிரதமரிடம் அவர் முறையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக அரசியல் சூழல் குறித்தும், அண்மையில் மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில், அதிமுகவினருக்கு வாய்ப்பு கொடுக்காதது பற்றியும் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் விவாரிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவினருடன், சசிகலா தொலைபேசியில் உரையாடி வருவதும், இதனால் அதிமுகவில் தேவையில்லாத சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது, பல்வேறு புகார்கள் காரணமாக திமுகவின் நடவடிக்கை குறித்தும் பாஜக தலைவர்களுடன் ஆலோனை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
