உலகம்

விண்வெளி சென்று திரும்பிய அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ்…

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் உள்பட ப்ளூ ஆர்ஜின் குழுவைச் சேர்ந்த 4 பேர் விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக பூமி திரும்பினர்.

விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்து செல்ல புளு ஆரிஜின் நிறுவனம் திட்மிட்டது. அதன்படி ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தயாரித்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் அமேசான் முன்னாள் சிஇஓ ஜெஃப் பெசோஸ், அவரது சகோதரர் மார்க் பெசோஸ், வேலி ஃபங் என்ற விண்வெளி வீராங்கனை ஆகியோர் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டனர்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நியூ ஷெப்பர்ட் ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது. சுமார் 3,600 கி.மீ. வேகத்தில் பறந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்களம், விண்வெளியில் 11 நிமிடங்கள் மிதந்தது. அப்போது அனைவரும் ஜீரோ கிராவிட்டியை அனுபவித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளை ஜெஃப் பெசாஸ் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

ஜெஃப் பெசாஸ் வெற்றிகரமாக தனது விண்வெளி பயணத்தை முடித்துள்ளார். 1969 ஆம் ஆண்டு நிலாவில், நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்த இதே நாளில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் உள்பட 4 பேர் விண்வெளிக்கு சென்று திரும்பியுள்ளனர்.

கடந்த வாரம் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 6 பேர் விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பியது நிலையில், தற்போது ஜெஃப் பெசாஸ் குழு, விண்வெளி சென்று பூமி திரும்பியுள்ளது. இனி விண்வெளி சுற்றுலா என்பது பிரபலமாக அதிக வாய்ப்பகள் உள்ளதாக கூறப்படுகிறது.