அரசியல்தமிழ்நாடு

நீட் தேர்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்… பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…

நீட் தேர்வை நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஒவ்வொரு பிரிவாக பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். இன்றைய ஆலோசனையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இந் ஆலோசனையின்போது கொரேனா பரவல் நிலவரங்கள் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கொரோனா 3-வது அல ஏற்படாதவாறு எசெயல்பட வேண்டும் என்பது குறித்தும் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என்றும், நீட் தேர்வு நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யுங்கள் என்றும் பிரதமரிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியமைக்காக இந்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை தமது அரசு 6 விழுக்காட்டில் இருந்து முழுமையாக தவித்துள்ளதாகவும், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வையும் பெரிய அளவில் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளதாகவும் பேசினார். இதனால் தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது என்றும் தடுப்பூசி ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்தார். தடுப்பூசி நெருக்கடியைச் சமாளிக்க சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க கோரியிருக்கிறேன் என்றும் உங்கள் ஆதவை எதிர்நோக்குவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் – கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழி வகுத்துவிடலாம் என்றும் இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.