6300 அடி பள்ளத்தாக்கின் உச்சியில் இருந்து கீழே விழுந்த 2 பெண்கள்…
ரஷ்யாவில் உள்ள 6300 அடி உயர பள்ளத்தாக்கின் உச்சியில் இருந்து இரண்டு பெண்கள் கீழே விழுந்து அதிசயமாக உயிர் தப்பினர்.
ரஷ்யாவின் தாகெஸ்தானில் கலக் பள்ளத்தாக் உள்ளது. இது 6300 அடி உயரம் கொண்ட இந்த பள்ளத்தாக்கின் விளிம்பில், ஊஞ்சல் ஒன்று உள்ளது. இந்த பள்ளத்தாக்கிற்கு வரும் பலர், ஊஞ்சலில் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பள்ளத்தாக்கிற்கு வந்த இரண்டு பெண்கள், ஊஞ்சல் அட விருப்பப்பட்டனர். மகிழ்ச்சியுடன் ஊஞ்சலில் அமர்ந்த அவர்களை அங்கிருந்த ஒருவர், ஊஞ்சலை தள்ளி விட்டார்.
ஊஞ்சல் சென்று வரும் ஒவ்வொரு முறையும், அதன் வேகத்தை அவர் அதிகப்படுத்தினார். ஒரு கட்டத்தில், அருகில் ஊஞ்சலின் செயின் அறுந்து, நிலை தடுமாறி அந்த பெண்கள் கீழே விழுந்தனர். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இரண்டு பெண்களும், குன்றின் விளம்பில் ஒரு குறுகிய டெக்கிங் மேடையில் விழுந்தனர். பின்னர் சிறு காயங்களுடன் அந்த பெண்கள் மீட்கப்பட்டனர். 6300 அடி உயரம் கொண்ட பள்ளத்தாக்கில் இரண்டு பெண்கள் விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
