நீட் தேர்வு தாக்கம் : முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் ஏ.கே.ராஜன் குழு
நீட் தேர்வு தாக்கம் குறித்த அறிக்கையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு இன்று சமர்ப்பிக்கிறது.
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை கடந்த ஜூன் 10 ஆம் தேதி தமிழக அரசு அமைத்தது. நீட் ஆய்வுக்குழு நியமனத்துக்கு பாஜகவின் தமிழக துணை பொது செயலாளர் கரு நாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையில், நீட் தேர்வு ஆய்வுக்குப அமைத்தது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக இல்லை என்றும், மத்திய அரசு சட்டங்களுக்கு எதிரானதாகவும், நீட் ஆய்வு குழு அமைப்ப இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில், நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த அறிக்கையை, ஏ.கே.ராஜன் குழு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கருத்து கூறி வருவதாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் கூறியிருந்தார். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடம் இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
