சினிமாதமிழ்நாடு

திமுக ஆட்சி பொற்கால ஆட்சியாகவே அமைந்துள்ளது… நடிகர் வடிவேலு பேச்சு…

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தற்போது குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் வடிவேலு, கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர்பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் அளித்துள்ளார். சென்னை தலைமை செயலளகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வடிவேலு, நிவாரண நிதி வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து ஒன்றரை மாதங்களில் உலகமே உற்றுப்பார்க்கும்படி கொரோனாவை கட்டுப்படுத்தி சாதனை படைத்துள்ளதாக கூறினார். திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒவ்வொரு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்றும் இது மக்களுக்கு பொற்கால ஆட்சியாகவே அமைந்துள்ளது என்றும் கூறினார். தான் இங்கு அரசியல் பேசவில்லை என்று கூறிய வடிவேலு, நன்றாக இருக்கும் தமிழ்நாட்டை பிரிக்க வேண்டாம் என்றும் கூறினார்.