Uncategorized

பச்சோந்திகளை விரட்டுவோம்… பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு…

அதிமுகவில் இருந்து சென்றவர்களைப் பற்றி கவலைப்படக் கூடாது என்றும் இதன் மூலம் பச்சோந்திகளை அடையாளம் காண முடிந்ததாகவும் பச்சோந்திகளை விரட்டி அடிப்போம் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியுள்ளார்.

திருப்பூரில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்தோர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் தேமுதிகவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், உங்கள் வருகையால் அதிமுக செழித்தோங்கும் என்றார். தேமுதிகவில் இருந்து வந்தவர் தகுதிக்கேற்ப அவர்களுக்கு பதவி வழங்க நிர்வாகிகள் பரிந்துரைக்க வேண்டும் என்றும், அவர்களை நல்ல முறையில் பயன்படுத்தினால் நல்ல முறையில் செயல்படுவார்கள் என்றார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் ஒரு சிறிய சரிவை சந்தித்துள்ளோம். அதிமுகவில் இருந்து சென்றவர்களைப் பற்றி கவலைப்படக் கூடாது என்றார். இதனால் பச்சோந்திகளை அடையாளம் காண முடிந்தது என்றும், பச்சோந்திகளை விரட்டி அடிப்போம என்று அவர் பேசினார். மேலும், அதிமுகவை நாடி வருபவர்களை வரவேற்போம் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.