Covid19உலகம்

டெல்டாவைத் தொடர்ந்து “லாம்ப்டா வைரஸ்”… அதிர்ச்சியில் உலக நாடுகள்…

லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது என்றும், இது டெல்டா வைரசை விட அதிக விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இன்னும் பரவவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரசின் டெல்டா வகை, தொற்றுநோய்களின் வளர்ச்சியை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், லாம்ப்டா வகை மாறுபாடு கொண்ட வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அசல் வைரசைவிட அதிகளவில் பரவக்கூடியதாக இருக்கும் என்ற அச்சம் உள்ளது. ஆனாலும், இது தொடர்பான ஆய்வுகள் போதுமான அளவு இல்லை. பெரு மற்றும் இதர தென் அமெரிக்க நாடுகளில் நோய் தொற்றை ஏற்படுத்திய மாறுபாடு இதுவாகும்.

லாம்ப்டா வைரஸ், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் கிட்த்தட்ட 80 சதவிகித தொற்றுநோய்களக்கு காரணமாகிறது. பல நாடுகளில் பல்வேறு மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க தொற்றை இந்த மாறுபாடு உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

லாம்ப்டா உள்ளிட்ட 7 மாறுபடுகளைக் வேரியண்ட் ஆஃப் இண்டெரெஸ்ட் என்று உலக சுகாதார அமைப்பு வரையரை செய்துள்ளது. இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இந்த வைரஸ் மாறுபாடு இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், ஆசியாவில், இஸ்ரேலில் மட்டுமே லாம்ப்டா வகை மாறுபாடு பதிவு செய்யப்பட்டுளது. பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த மாறுபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையில் இருந்து மீண்டும் வரும் இந்தியா போன்ற நாடுகள், முன்கூட்டியே கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.