Covid19உலகம்

அமெரிக்காவில் 16 கோடி பேருக்கு 2 தவணை தடுப்பூசி – அமெரிக்க அதிபர் நெகிழ்ச்சி

அமெரிக்காவில் இந்த வார இறுதிக்குள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை 16 கோடியை எட்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்த வார இறுதிக்குள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை 16 கோடியை எட்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் கூறியதாவது :

போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் துரிதப்படுத்தியதால் தான் வெறும் 150 நாட்களில் கிட்டத்தட்ட 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிந்ததாகக் கூறினார்.

அமெரிக்காவில் குறைந்தபட்சம் 18 கோடியே 20லட்சம் பேர் ஒரு கொரோனா தடுப்பூசியையாவது செலுத்தியிருப்பதாகத் தெரிவித்த அவர், அதில் 90 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள் மற்றும் 70 சதவீதம் பேர் 27 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்று தெரிவித்தார்.