அரசியல்இந்தியா

ஜல்சக்தி துறை அமைச்சருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது: அமைச்சர் துரைமுருகன்

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்டமாட்டோம் என ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் உறுதி அளித்ததாக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

டெல்லி சென்றுள்ள அமைச்சர் துரைமுருகன், ஜல்கச்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த பிரச்சனையானாலும், தமிழகத்தை கேட்காமல் அனுமதிக்க மாட்டோம் என்றும் இருவரையும் கலந்து பேசிதான் முடிவு செய்வோம் என்றார்.

கர்நாடக அரசு, மார்கண்டேய நதியில் அணை கட்டியிருப்பதற்கு, தமிழக அரசிடம் இருந்தும் மத்திய அரசிடம் இ,ருந்து உரிய அனுமதி பெறவில்லை என்றும், தன்னிச்சையாக கர்நாடக அரசு மார்கண்டேய நதியில் அணை கட்டியிருப்பது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அதற்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறியதாக துரைமுருகன் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜல்சக்தி துறை அமைச்சர் கூறியதாக அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சருடனான பேச்சுவார்தை திருப்திகரமாக இருந்ததாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.