முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர் மீது பணமோசடி புகார்…
முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.விஜயபாஸ்கரின் நெருங்கிய ஆதரவாளரான கர்ணன் என்ற கருணாகரன் மீது பணமோசடி செய்து விட்டதாக புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை ஆறுமுகம் என்பவர் அளித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கேன்டீன் நடத்துமாறும், அதற்கு 15 லட்சம் ரூபாய் முன்பணம் தருமாறும் கருணாகரன் கேட்டதாகவும், அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு கருணாகரனிடம் 15 ரூபாய் கொடுத்ததாகவும் புகாரில் கூறியுள்ளார். 16 லட்சம் ரூபாய் செலவு செய்து, கேன்டீனில் உள்கட்டமைப்பு பணிகள் செய்ததோடு தினசரி வாடகையாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், 15 மாதங்களுக்குப் பிறகு கூடுதலாக 10 லட்சம் ரூபாய் முன்பணம் தருமாறும், தினசரி வாடகையை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுக்கும்படி கேட்டார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், என்னை வெளியேற்றிவிட்டு வேறு நபரை கேண்டீன் நடத்து செய்துள்ளார்.
இதையடுத்து கொடுத்த முன்பணத்தை திருப்பி தருமாறு கேட்டதற்கு கருணாகரன் கொடுக்க மறுத்து வருவதோடு, கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றும், இது தொடர்பாக விஜயபாஸ்கர், அப்போதைய எஸ்.பி., மருத்துவ கல்லூரி முதல்வ ஆகியோரிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே புகார் கொடுத்த தொகையைத் திருப்பி தரவும், குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஆறுமுகம் புகாரில் தெரிவித்துள்ளார்.
