அரசியல்தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் ஆற்றல்மிக்க தலைவராக உருவெடுத்திருக்கிறார்… முன்னாள் அமைச்சர் பழனியப்பன் புகழாரம்…

அமமுக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்திமுகவில் இணைந்தார். அவருடன் ஆதரவாளர்கள் பலரும் திமுகவில் இணைந்தனர்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பழனியப்பன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி மக்கள் ஏற்றுக்கொண்ட விரும்பிய தலைவராக இருப்பதாக கூறினார்.

ஏழை – எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை நல்லாட்சி மூலம் முதலமைச்சர் செய்து கொண்டிருப்பதாகவும், தற்போது திமுக ஆட்சிக்காலம், தமிழ்நாட்டின் பொற்காலமாக மாறி இருப்பதாக கூறினார்.

தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்கப்படும் என்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டதாக கூறிய அவர், அமமுகவில் இருந்து விலகியதற்கு மனக்கசப்பு எதுவும் கிடையாது என்றும் டிடிவி தினகரன் ஒரு நல்ல மனிதர் என்று கூறினார்.

அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லக்கூடிய ஆற்றல் மிக்க தலைவராக மு.க.ஸ்டாலின் உருவெடுத்து இருப்பதாகவும், உழைப்பதற்காக மட்டுமே திமுகவில் இணைந்திருப்பதாகவும் பழனியப்பன் கூறினார்.