Covid19தமிழ்நாடு

“கொரோனா இறப்புகள் மறைப்பதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு”… மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி..

கொரோனா தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மருத்துவ துறை செயலாள்ர டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தளர்வுகள் தொடர வேண்டு என்றால், பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் முறையாக பின்பற்ற வேண்டும் என்றார். வரும் மாதங்களில் மிக கவனமாக பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தளர்வுகள் வந்துவிட்டது, அதனால் கோவிட் இல்லை என்ற எண்ணத்தில் பொதுமக்கள் இருக்கக் கூடாது என கூறினார்.

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று குறைந்துள்ளதாக தெரிவித்தார். தற்போது கொரோனா கட்டுப்பாடு மையத்திற்கு அழைப்புகளே வராத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பரிசோதனை குறையக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார்.

தமிழகத்தில் மொத்தம் 43,745 கோவிட் படுக்கைகள் உள்ள நிலையில் தற்போது 3,682 படுக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். கோவிட் பரிசோதனை, விழங்கப்படும சிகிச்சை, காய்ச்சல் கண்காணிப்பு பணி முழுமையாக செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொரோனாவால் ஏற்பட்ட இறப்புகளை மறைப்பதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என்றும், மரணத்திற்கான காரணம் தவறாக கறிப்பிடப்பட்டிருந்தால் அதை திருத்திக்கொள்ள வாய்ப்புள்ளது எனவும் மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.