யோகிபாபு – நடராஜன் திடீர் சந்திப்பு… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் மற்றும் நடிகர் யோகிபாபு சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய யார்கர் கிங் நடராஜன், பின்னர் இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தினார். காலில் ஏற்பட்டுள்ள காயத்தால், இங்கிலாந்து தொடர், ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், தமிழ் சினிமா நடிகர் யோகி பாபுவும், யார்க்கர் கிங் நடராஜன் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டுள்ளனர். இருவரும் உணவகம் ஒன்றில் சேர்ந்து எடுத்துக் கொணடு புகைப்படத்தை நடராஜன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தீவிர முருகன் பக்தரான யோகிபாபு, முருகன் சிலை ஒன்றை நடராஜனுக்கு அன்பு பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்து நடராஜன் தனது டுவிட்டரில், நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கிய நாள் இது என்று பதிவிட்டுள்ளார். எப்போதும் அன்பாகவும், கலகலப்பாகவும் இருக்கக்கூடிய நண்பர் யோகிபாபுவை சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது யோகிபாபு – நடராஜன் இணைந்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றனர்.
