Covid19அரசியல்தமிழ்நாடு

கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அறிவிக்கப்படும்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

மாவட்ட வாரியாக செய்யப்படும் கொரேனா பரிசோதனைகள், அரசு செய்தி குறிப்பில் வெளியிடப்படும் என்று மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த ஆட்சியின்போது, கொரோனா தொற்று குறைந்த நிலையில், பரிசோதனை எண்ணிக்கையும் குறைந்தது. அவ்வாறு இல்லாமல், தொற்று எண்ணிக்கை குறைந்தாலும், பரிசோதனை எண்ணிக்கை குறையக் கூடாது என்ற முதலமைச்சரின் அறிவுரைப்படி, பரிசோதனைகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருவதாக கூறினார். மேலும், தற்போது 1.60 லட்சம் முதல் 1.70 லட்சம் என்கிற வகையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தடுப்பூசிகளைப் பொறுத்தவரை ஒன்றிய அரசு, கொள்முதல் செய்து அனுப்பும் மருந்துகளை மக்களுக்கு வழங்க தயாராக இருக்கிறோம். கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பு மருந்து வந்து கொண்டிருக்கிறது. ஸ்புட்னிக் போன்ற பல்வேறு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், ஒன்றிய அரசு கொள்முதல் செய்து, தமிழக அரசுக்கு ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில், அவை மாவட்ட வாரியாக விநியோகிக்கப்படும் என்றார்.

ஒவ்வொரு நாளும் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றார். நேற்றைய தினம் (1.7.2021) பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை இன்று மாலை வெளியாகும் என்று கூறினார்.