நடிகர் அர்ஜூன் கட்டிய 28 அடி உயர அஞ்சநேயர் சிலை பிரிதிஷ்டை… விரைவில் கும்பாபேஷேகம் நடத்த திட்டம்…
பகவான் ஆஞ்சநேயருக்கு, நடிகர் அர்ஜூன் கோயில் கட்டி உள்ளார். சென்னை போரூர் அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள தனது சொந்த நிலத்தில் ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டி உள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே ராகவேந்திரர் கோவிலை கட்டி உள்ள நிலையில், நடிகர் அர்ஜூனுக்கு தனக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டியுள்ளார். ஆஞ்சநேயர் சிலைக்காக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கொய்ரா கிராமத்தில் 200 டன் எடை கொண்ட ஒரே கல்லில் சிலை நிர்மாணிக்கப்பட்டு, 22 சக்கரங்கள் கொண்ட ராட்சத டிரக்கில் கெருகம்பாக்கத்துக்கு கொண்டு வரப்பட்டது.

பகவான் ஆஞ்சநேயர் உட்கார்ந்திருப்பது போன்ற இந்த சிலை 28 அடி உயரமும் 17 அடி அகலமும் கொண்டது. கெருகம்பாக்கத்துக்கு கொண்டு வரப்பட்ட சிலைக்கு விசேஷ பூஜைகள் செய்த பின்னர், பெரிய கிரேன் மூலம் பீடத்தில் அமர்த்தப்பட்டது. உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோயிலாக இதனை உருவாக்கி வருவதாகவும், கோயில் உள் பிரகாரம், வெளிப்பிரகாரம் கட்டும் வேலைகள் நடந்து வருவதாக நடிகர் அர்ஜூன் தெரிவித்தார்.
ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது குறித்து நடிகர் அர்ஜூன், இன்றைய தினம் எனக்கு மிகவும் சந்தோஷமான நாள் என்றார். ஆஞ்சநேயருக்கு கோயில் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. அது ஆண்டவன் அருளால் இன்று சிலையை நிறுவி விட்டதாக கூறினார். ஒரு வரடத்தில் அனைத்து பணிகளும் முடிந்து விடும் என்றும் நடிகர் அர்ஜூன் தெரிவித்தார்
