Uncategorized

டாஸ்மாக் திறப்பு,பெட்ரோல் விலை உயர்வு…! ஜூலை 5-ல் தேமுதிக ஆர்ப்பாட்டம் !ட்விட்டர் பதிவு மூலம் தகவல் தெரிவித்த விஜயகாந்த்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 5-ஆம் தேதி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவில் கூறிருப்பதாவது :

”பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ஹட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தும், கொரோன தொற்று பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கட்டுமான பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மின்சாரம் போன்ற விலைவாசி உயர்வை கண்டித்தும் தேமுதிக சார்பில் வரும் 5-ம் தேதி காலை 10 மணியளவில், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறை அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.