குற்றம்

பணம் கேட்டு மாமியார் டார்ச்சர்… புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை… கணவர் – மாமியார் உட்பட 3 பேர் கைது…

வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை, திருமுல்லைவாயிலில் நடந்துள்ளது.

ஆவடி அருகே திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ ஆகியோருக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்து. திருமணத்துக்குப் பேசியபடி, மணமகன் வீட்டாருக்கு, நகை – பணம் வரதட்சணையாக வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஜோதிஸ்ரீயிடம், பாலமுருகனும், அவரது தாயார் அம்சாவும், நாங்கள் வீட்டுக்கடன் வாங்கியுள்ளோம் என்றும் தங்களுக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே உனது பெற்றோரிடம் பணம் வாங்கி வரும்படி வற்புறுத்தியுள்ளனர். இதனையடுத்து, ஜோதிஸ்ரீ தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்திய பிறக, கடந்த ஏப்ரல் 7 ஆம தேதி அன்று ஜோதிஸ்ரீ மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மாமியார், அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கவே, வீட்டின் முதல் மாடிக்கு ஜோதிஸ்ரீ சென்றுள்ளார்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த அம்சா, ஜோதிஸ்ரீ சென்ற அறைக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜோதிஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு கணவர் மற்றும் மாமியார்தான் காரணம் என்றும் வீடியோ பதிவிட்டிருந்தார். வீடியோவில், ஒற்றை தாலிக்கு பைத்தியம் பட்டமா? என வீடியோவில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். மேலும், ஜோதிஸ்ரீ கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் தனது சாவுக்கு கணவர் மற்றும் மாமியார்தான் காரணம் என்றும், அவரது குடும்பத்தினரை விட வேண்டாம் என்றும் எழுதியிருந்தார்.

ஜோதிஸ்ரீயின் தற்கொலைக்கு கணவர் பாலமுருகன், அவரது தாயார் அம்சா, பாலமுருகனின் சகோதரர் காரணம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.