அரசியல்தமிழ்நாடு

அதிமுகவில் என்னதான் நடக்கிறது ! அடுத்தடுத்து திமுகவில் இணையும் அதிமுக நிர்வாகிகள்…

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் அவ்வப்போது பல சஞ்சலங்கள் நடந்து வருகின்றனர் .இதற்கு இடையில் சசிகலாவின் ஆடியோ அரசியல் அதிமுகவின் நிர்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது . சசிகலாவுடன் பேசும் அதிமுகவினர் யாராக இருந்தாலும் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றன .

இந்நிலையில் நேற்று (25.06.2021) அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றிய சேர்மன் N. செல்வராஜ் தலைமையில்‌ 40க்கும் மேற்பட்ட அஇஅதிமுகவினர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் திமுகவின் கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் , முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கழக பொருளாளர் ,பாலு , கழக துணைப் பொதுச் செயலாளர் ராஜா மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.