தமிழ்நாடு

5 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வாழ்விழப்பு… பள்ளிகளை மூட தமிழ்நாடு நர்சரி – பிரைமரி பள்ளி சங்கம் முடிவு…!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பணிபுரியும் 5 லட்சம் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் வாழ்விழந்து உள்ளதால், தனியார் பள்ளிகளை விரைவில் மூட தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்குரிகுலேஷன் பள்ளி சங்கம் சார்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடர் காரணமாக 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடியிருக்கிறது. பாடங்கள் நடத்த முடிவதில்லை. ஆன்லைன் இணையதளம் வழியாக கல்வி கொடுத்து கொண்டிருக்கிறோம். மெட்ரிகுலேஷன் – சிபிஎஸ்இ – மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு சில நர்சரி பிரைமரி பள்ளிகளில் கல்வி கொடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளிகள் மூடப்பட்டதால் 10 ஆயிரம் நர்சரி பிரைமரி பள்ளிகளில் பணிபுரிவோர் வாழ்விழந்து நிற்கிறார்கள். அதனால் பள்ளிகளை மூடுவதென்று முடிவெடுத்திருக்கிறோம். பல பள்ளிகள் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது. மின்சாரம் கட்டணம், இஎஸ்ஐ, சொத்து வரி உள்ளிட்டவைகள் கட்ட வேண்டும். 50 ஆயிரம் வாகனங்கள் இருக்கிறது. வாகனத்திற்கு இருக்கை வரி, இன்சூரன்ஸ், எப்சி, சாலைவரி, இவ்வாறு பல வரிகள் கட்ட வேண்டும். எனவே பள்ளிகள் நடத்துவதென்பது கேள்விக்குறியாகி விட்டது. 5 லட்சம் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் வாழ்விழந்து நிற்கிறார்கள். நாங்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். தனியார் பள்ளி ஆசிரியர்களைக் கேட்பதற்கு நாதியில்லாமல் இருக்கிறோம். எனவே எங்கள் பள்ளிகளை எல்லாவற்றையும் மூடிவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறோம்.

தமிழக அரசு பள்ளிகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். கொரோனா காலத்தில் சாலை வரி, இன்சூரன்ஸ் இவைகள் வேண்டாம். இவற்றை எல்லாம் தள்ளுபடி செய்யுங்கள். மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பை துண்டிக்கிறீர்கள் அல்லவா? கல்வி கட்டணத்தை செலுத்தவில்லை நாங்கள் எப்படி வாழ்வது? என்று கேள்வி எழுப்பினார்.

அரசு எங்களுக்கு மாற்று தீர்வு சொல்ல வேண்டும் என்றும் அவ்வாறு இல்லை என்றால் நிச்சயமாக நர்சரி, பிரைமரி, மேட்ரிகுலேஷன் பள்ளிகளை மூட முடிவெடுத்திருக்கிறோம் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்குரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.