தமிழகத்தில் இன்று புதிதாக 6,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சம் தோட்ட நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.
தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறிருப்பதாவது :
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,67,268 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 24,49,577 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 9,046 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை, 23,67,831 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. கொரோனா பாதித்து வீடு மற்றும் மருத்துவமனையில் 49,845 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 155 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 31,901 ஆக அதிகரித்துள்ளது.
