அதிர்ச்சியில் உலக நாடுகள்! வட கொரியாவில் ஒருவருக்குக் கூட கொரோனா இல்லையாம் ?
வட கொரியாவில் நாட்டில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று இல்லை என உலக சுகாதார அமைப்பிடம் வட கொரியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பிடம், வட கொரியா அளித்துள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :
ஜூன் 10ம் தேதி வரை அறிகுறிகளுடன் இருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சோதனை செய்ததாகவும், அதில் யாருக்கும் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
வட கொரியாவின் மோசமான சுகாதாரக் கட்டமைப்பு சீனாவுடன் எல்லைப் பகிர்வு எந்த ஒரு பொருளாதாரத் தேவைக்கும் சீனாவைச் சார்ந்திருக்கும் வடகொரியாவில் கொரோனா தொற்று இல்லாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உலக சுகாதாரத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
