அரசியல்தமிழ்நாடு

அதிர்ச்சியில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ! அதிமுக மாநில நிர்வாகி கட்சி தாவல்! பனையூர் பாபு எம்.எல்.ஏ தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார்!

அதிமுகவின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் டி.சி.கோவிந்தசாமி
இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மற்றும் துரைப்பாக்கம் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலராக இருந்த டி.சி.கோவிந்தசாமி இன்று அதிமுகவில் இருந்து விலகி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு எம்.எல்.ஏ முன்னிலையில் வி.சி.க கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்

தற்போது சசிகலாவின் ஆடியோ அரசியலால் அதிமுகவில் அவ்வவ்போது சற்று சலலப்பு ஏற்பட்டு வரும் நிலையில் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த டி.சி.கோவிந்தசாமி வி.சி.க கட்சியில் இணைந்து இருப்பது கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அவர்களை மட்டுமல்லாமல் கட்சி தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.