இந்தியாகுற்றம்

17 வயது சிறுமியை தாக்கி மாடியிலிருந்து தூக்கி வீசிய கொடூர வாலிபர்கள்!- நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா என்ற பகுதியில் பெற்றோருடன் தங்கியிருந்த 17 வயது சிறுமியின் வீட்டுக்குள் திலீப், கவுசல் மற்றும் அவனிஷ் என்ற 3 இளைஞர்கள் அத்துமீறி நுழைந்துள்ளார் .

சிறுமியுடன் தகராறில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் திடிரென சிறுமியை தூக்கி மாடியில் இருந்து கீலே வீசியுள்ளனர் . இதில் படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பலத்த காயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் சுயநினைவுடன் இருப்பதாகவும், அவரின் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்த சிறுமியின் தந்தை 3 இளைஞர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

சிறுமி மாடியில் இருந்து கீலே விழுந்த சிசிடிவி வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது.

சிறுமியின் தந்தை அளித்த புகாரில், தங்கள் வீட்டிற்கு அருகே வசித்து வரும் 3 இளைஞர்கள் கடந்த சில மாதங்களாக எனது மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்தனர். திங்கட்கிழமை இரவு ஒருவர் எனக்கு போன் செய்து மகளிடம் பேச வேண்டும் என கூறினார். நான் மறுத்துவிட்டேன், அதற்கு அந்த இளைஞர் என்னை தகாத வார்த்தையில் திட்டினார். இரவு 8 மணிக்கு 3 இளைஞர்களும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தினர், பின் தூக்கிச் செல்ல முயன்றனர். குடும்பத்தினர் கூச்சலிட தொடங்கியதால் குற்றவாளிகள் எனது மகளை 2-வது மாடியிலிருந்து தூக்கி வீசிவிட்டு தப்பியோடி விட்டனர் என சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இரண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.