பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும்..! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
சட்டமன்ற கூட்டத் தொடரின் 2 வது நாளான இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது சரியாக இருக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் .
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-
வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் அதனை எதிர்த்து வருகிறோம். ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருவதால் தற்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது சரியாக இருக்காது. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார் .
தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தீர்மானம் நிறைவேற்ற முடிவுச் செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தும் தீர்மானமும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என கூறினார்.
