“தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு… தேர்தலுக்குப் பிறகு ஒரு பேச்சா…!” திமுகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி…
தேர்தல் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு என்றும் தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சாக திமுகவின் செயல்பாடு உள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். 16-வது சட்டமன்ற முதல் கூட்டத் தொடரில், ஆளுநர் பான்வாரிலால் புரோகித்-ன் உரையில் முக்கிய அறிவிப்புகள் எதுவு இடம் பெறவில்லை என்று இது பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை, கலைவாணர் அரங்கில், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டார்கள் என்றும், ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது அந்த நிலை மாறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இன்னும் நீட் தேர்வு முடிவுக்கு வரவில்லை என்றும், எனவே மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று அண்மையில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதை சுட்டிக்காட்டினார். தேர்தல் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு… தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சாக திமுகவின் செயல்பாடு உள்ளதாக அவர் விமர்சித்தார்.
தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அதற்கு மாறாகத்தான் திமுகவின் செயல்பாடு இருப்பதாகவும் அவர் கூறினார். திமுக ஆட்சி அமைத்து 44 நாட்கள் ஆன நிலையில், விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிர் கடன் ரத்து செய்ததற்கான சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்கிற திமுகவின் வாக்குறுதி குறித்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை என்றார்.
அதேபோல், 5 சவரன் வரை நகைக்கடன் ரத்து எனும் திமுகவின் வாக்குறுதி தொடர்பான அறிவிப்பும் இடம் பெறவில்லை என்றும் சய உதவி குழுக்கள் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பும் இடம் பெறவில்லை. பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்ற வாக்குறுதியும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
