இரும்பு சங்கிலியால் பிணைத்து காதலை சோதித்த தம்பதியர்… இறுதியில் நடந்த சோகம்…
உக்ரைன், கார்கிவ் நகரைச் சேர்ந்த புஸ்டோவிடோவா (29) என்கிற இளைஞரும், அலெக்ஸாண்டர் குட்லேவும் காதலித்து வந்தனர். தங்கள் காதலை சோதனை செய்வதற்காக, காதலர் தினம் அன்று, தங்கள் இருவருடைய கைகளை, ஒரே இரும்பு சங்கிலியால் பிணைத்துக் கொண்டனர். இவர்கள் இருவரும் சுமார் 123 நாட்கள் கட்டப்பட்ட கைகளுடன் இருந்துள்ளனர்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, தம்பதியினர் தங்கள் திருமண நாளில் இரும்பு சங்கிலியை அவிழ்க்க வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தனர். ஆனால் ஒரு சில வாரங்கள் கழிந்த நிலையில் அவர்கள் நிலைப்பாடு தலைகீழாக மாறியது. 123 நாட்களில் சங்கிலி இணைப்பு வாழ்க்கையை முடித்துக் கொண்டும், உறவில் இருக்க விரும்பவில்லை என்று கூறி இருவரும் பிரிந்து சென்றனர்.

எங்கு சென்றாலும், ஒன்றாக செல்வது, ஒரே இடத்தில் இருப்பதும், 24 மணி நேரமும் ஒருவரையொருவர் ஒருபோதும் பிரியக் கூடாது என வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களது காதல், நாட்கள் செல்ல செல்ல காதல் கசந்து போனது. இதற்குமேல் முடியாது என்ற நிலையில் கையில் போட்டிருந்த இரும்பு சங்கிலியை அவர்கள் அவிழ்த்துள்ளனர்.

சங்கிலிகள் துண்டிக்கப்பட்டபின், இருவரும், தனித்தனியாக பிரிந்து சென்று விட்டனர். தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நாங்கள் செய்ததை மீண்டும் யாரும் செய்ய வேண்டாம் என்றம், மற்ற தம்பதிகளுக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கும் என நினைக்கிறேன். நாங்கள் இப்போது ஒன்றாக இல்லை. இந்த அனுபவம் கிடைத்ததில் நாங்கள் இப்போது மகிழ்ச்சியடைகிறோம். என்று பதிவிட்டுள்ளார்.
