இந்தியா

கொரோனா 3-வது அலை குழந்தைகளைப் பாதிக்காது… எய்ம்ஸ் சொன்ன குட் நியூஸ்…

கொரோனா வைரஸ் 3-வது அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று உலக சுகாதார துறை அமைப்பு மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை இந்தியாவை தாக்கியுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டு வந்த நிலையில், தற்போது வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கொரோனா 3-வது அலை வரும் நவம்பர் மாதம் தாக்கக் கூடும் என்றம், இதனால் 18 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் அதிகளவில் பாதிக்கப்படக் கூடும் மருத்துவர்கள் எச்சரித்தனர். இதன் காரணமாக 3-வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரகம், குழந்தை மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை விடப்பட்டது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு மற்றும் எய்ம்ஸ் இயக்குநர் – மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று ஆய்வு நடத்தியது. 5 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 2 வயது முதல் 15 வயது வரையிலான 700 குழந்தைகள், 18 வயதுக்கு மேற்பட்ட மூவாயிரத்துக்கும் அதிகமானோரிடம் கலந்து கொண்டனர். ஆய்வின் முடிவில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

குழந்தைகளிடம் 55.7 சதவிகிதமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் 63.5 சதவிகிதமாகவும், செரோடோனின் அளவு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே கொரோனா 3-வது அலை ஏற்பட்டாலும் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இரக்காது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.